கடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கடி1கடி2கடி3

கடி1

வினைச்சொல்கடிய, கடிந்து, கடிக்க, கடித்து

 • 1

  உரிமையோடு ஒருவரைக் கண்டித்தல்.

  ‘அவர் ஒரு நாள்கூட என்னைக் கடிந்து பேசியதில்லை’
  ‘‘பெரியவர்களிடம் இப்படியா பேசுவது?’ என்று மகனைக் கடிந்துகொண்டாள்’

கடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கடி1கடி2கடி3

கடி2

வினைச்சொல்கடிய, கடிந்து, கடிக்க, கடித்து

 • 1

  (பொருளை நொறுக்குதல், துண்டாக்குதல் போன்றவற்றிற்காக) பற்களை ஒன்றில் பதித்துப் பலமாக அழுத்துதல்; (நாய், பாம்பு முதலியன) பல் பதித்துக் கவ்வுதல்.

  ‘தாத்தாவுக்குப் பல் இல்லை. கடித்துச் சாப்பிட முடியாது’
  ‘பச்சைமிளகாயைக் கடித்தால் உறைக்காதா?’
  ‘நகத்தைக் கடிக்காதே, கெட்ட பழக்கம்’
  ‘அவனை நாய் கடித்துவிட்டது’

 • 2

  (பூச்சி, வண்டு, பாம்பு முதலியன) வாய்ப் பகுதியால் அல்லது கொடுக்கால் வலி ஏற்படும் அளவுக்குக் குத்துதல்; கொட்டுதல்; கொத்துதல்.

  ‘தேள் கடித்த இடம் கடுக்கிறது’

 • 3

  (புதிய செருப்பு, அரைஞாண் கயிறு போன்றவை) தோலில் பதிந்து அல்லது உராய்ந்து புண்ணாக்குதல்.

  ‘புதிய செருப்பு காலைக் கடிக்காமல் இருக்க அதில் எண்ணெய் தடவ வேண்டும்’
  ‘அரைஞாண் கயிறு இடுப்பைக் கடிக்கிறது’

 • 4

  பேச்சு வழக்கு (பேச்சின் மூலம்) சலிப்பு உண்டாக்கி நோகச் செய்தல்.

  ‘காலை நேரத்தில் கடிக்காமல் உருப்படியாக வேலையைச் செய்’

கடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கடி1கடி2கடி3

கடி3

பெயர்ச்சொல்

 • 1

  கடிக்கும் செயல் அல்லது கடிக்கப்பட்ட நிலை.

  ‘குழந்தையைப் பிடித்திருந்த அவளது கையில் வெடுக்கென்று ஒரு கடி’
  ‘பாம்புக் கடி’
  ‘இங்கு நாய்க் கடிக்குச் சிகிச்சை அளிக்கப்படும்’

 • 2

  (கொசு, குளவி முதலியவை) குத்துதல்; கொட்டுதல்.

  ‘கொசுக் கடி தாங்க முடியவில்லை’

 • 3

  பேச்சு வழக்கு சலிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது.

  ‘உன் கடியைத் தாங்க முடியாமல் எல்லோரும் ஓடுகிறார்கள்’
  ‘இந்தப் படம் ஒரே கடி’