தமிழ் கடித்துக் குதறு யின் அர்த்தம்

கடித்துக் குதறு

வினைச்சொல்குதற, குதறி

  • 1

    (ஒருவரை) மிகுந்த கோபத்துடன் கடுமையாகத் திட்டுதல்.

    ‘வேலைக்கு ஐந்து நிமிடம் தாமதமாகப் போனால்கூட என் மேலதிகாரி கடித்துக் குதறிவிடுவார்’
    ‘நான் ஆங்கிலப் பாடத்தில் வாங்கியிருந்த மதிப்பெண்களைப் பார்த்ததும் என் அப்பா கடித்துக் குதறிவிட்டார்’