தமிழ் கடினம் யின் அர்த்தம்

கடினம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (செயலைக் குறிக்கும்போது) எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது; சிரமத்தைத் தருவது.

  ‘அவரைப் பேச்சில் வெல்வது கடினம்’
  ‘கடினமாக உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்’
  ‘கடின உழைப்பு’

 • 2

  உறுதி; கெட்டித் தன்மை.

  ‘கடினமான ஆமை ஓடு’

 • 3

  (உள்ளத்தைக் குறிக்கும்போது) இரக்கமற்ற தன்மை.

  ‘கடின உள்ளம் படைத்தவர்’

 • 4

  (சாதகமான அல்லது எதிர்பார்க்கும்) வாய்ப்பு குறைவாக இருக்கும் நிலை.

  ‘அவர் பிழைப்பது கடினம்’
  ‘உனக்கு அந்த வேலை கிடைப்பது கடினம்’