தமிழ் கடு யின் அர்த்தம்

கடு

வினைச்சொல்கடுக்க, கடுத்து

 • 1

  (ஒரு செயலைத் திரும்பத்திரும்பச் செய்வதால் அல்லது நீண்ட நேரம் செய்வதால் கை அல்லது கால்) குத்துவது போன்று வலித்தல்; (வயிற்றில்) பிசைவது போன்ற வலி ஏற்படுதல்.

  ‘கடிதம் எழுதிஎழுதிக் கை கடுக்கிறது’
  ‘இரண்டு நாட்களாக வயிறு கடுக்கிறது’

 • 2

  (தேள், குளவி முதலியவை கொட்டிய இடம்) விண்விண்ணென்று தெறித்தல்.

  ‘தேனீ கொட்டிய இடம் கடுக்கிறது’

 • 3

  வட்டார வழக்கு (நீரின் சுவையைக் குறிப்பிடும்போது) காரத் தன்மையைக் கொண்டிருத்தல்.

  ‘கிணற்றுத் தண்ணீர் கடுப்பதற்கு அதில் உள்ள சுண்ணாம்புச் சத்துதான் காரணம்’