தமிழ் கடுகடு யின் அர்த்தம்

கடுகடு

வினைச்சொல்கடுகடுக்க, கடுகடுத்து

  • 1

    (பேச்சில், செயலில் ஒருவர் தன் கோபத்தின்) கடுமையை வெளிப்படுத்துதல்.

    ‘அவர் காலையிலிருந்தே சரியாகப் பேசவில்லை. யார் போய் எது கேட்டாலும் கடுகடுக்கிறார்’
    ‘அம்மாவின் முகம் கோபத்தில் கடுகடுத்தது’