தமிழ் கடுகு யின் அர்த்தம்

கடுகு

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் தாளிப்பதற்குப் பயன்படும்) மிகச் சிறியதாகவும் உருண்டையாகவும் இருக்கும் கரிய நிற விதை/அந்த விதையைத் தரும் செடி.

    ‘எண்ணெய்ச் சட்டியில் கடுகு வெடித்ததும் நறுக்கி வைத்திருந்த தக்காளியையும் வெங்காயத்தையும் அதில் போட்டு வதக்கினேன்’
    ‘கொல்லையில் கடுகு முளைத்திருக்கிறது’