தமிழ் கடுப்பு யின் அர்த்தம்

கடுப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தேள், தேனீ முதலியவை கொட்டிய இடத்தில் ஏற்படும்) தெறிக்கும் வலி.

  ‘தேள் கொட்டிய இடத்தில் கடுப்பு’

 • 2

  (கோபத்தால் பாதிக்கப்பட்டு உண்டாகும்) கொதிப்பு; கடுமை.

  ‘திரும்பத்திரும்ப நான் செய்த தப்பையே சொல்லிக் கடுப்பு உண்டாக்காதே’
  ‘‘நான் ஒரு முன்னாள் அமைச்சர். என்னை இப்படி நடத்துகிறீர்களே!’ என்றார் சற்றுக் கடுப்புடன்’

 • 3

  எரிச்சல்.

  ‘அவனுக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதே கடுப்பாக இருக்கிறது’

 • 4

  (நீரில் உள்ள) காரத் தன்மை.

  ‘தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் நீரின் கடுப்புத் தன்மை கூடுகிறது’