தமிழ் கடுமை யின் அர்த்தம்

கடுமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பொறுக்க முடியாத) அளவுக்கு அதிகம்.

  ‘வெளியில் வெயிலின் கடுமை’
  ‘கடுமையான குளிர்’
  ‘அவருக்குக் கடுமையாகக் கோபம் வந்தது’

 • 2

  மிகவும் தீவிரம்.

  ‘போர் கடுமையாக நடந்தது’
  ‘அந்தத் திரைப்படத்துக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது’

 • 3

  மிகவும் கஷ்டம்; கொடுமை.

  ‘ஏழ்மை அவனுக்குக் கடுமையாகத் தோன்றவில்லை’

 • 4

  (நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து விலகாத) கண்டிப்பு.

  ‘விற்பனைப் பொருள்களுக்குக் கடுமையான தரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’

 • 5

  கண்டிப்பு.

  ‘குழந்தையிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம்’