கடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கடை1கடை2கடை3

கடை1

வினைச்சொல்கடைய, கடைந்து

 • 1

  (மத்து, கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து) வலமாகவும் இடமாகவும் மாறிமாறிச் சுழலச் செய்தல்.

  ‘தயிர் கடைய மத்து எடுத்துவரச் சொன்னால் கீரை கடையும் மத்தைக் கொண்டுவருகிறாயே’
  ‘தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் மற்றொரு புறமுமாக நின்று பாற்கடலைக் கடைந்து அமுது எடுத்தார்களாம்’
  ‘ஆதிவாசிகள் தீக் கடைவதற்குப் பயன்படுத்திய கோலை அருங்காட்சியகத்தில் காணலாம்’

 • 2

  (கடைசல் எந்திரத்தின் மூலம் உலோகம், மரம் போன்றவற்றை) தேய்த்துத் தேவையான வடிவம் அமைத்தல்.

  ‘தேக்குக் கட்டையைக் கடைவதற்குப் பட்டறைக்கு எடுத்துப்போனார்கள்’
  ‘இயந்திரத்தின் இந்தப் பாகத்தைக் கடைவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்’

கடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கடை1கடை2கடை3

கடை2

பெயர்ச்சொல்

 • 1

  (பொருள்கள்) விற்கப்படும் இடம்; அங்காடி.

  ‘பூக் கடை’
  ‘துணிக் கடை’
  ‘லட்டு கடையில் வாங்கியதா, வீட்டில் செய்ததா?’

 • 2

  பேச்சு வழக்கு (வீட்டில் உள்ள நபர்களுக்கு) ஒருவரை அடுத்து மற்றவர் என்று தொடர்ந்து உணவு தருதல்.

  ‘காலையில் காப்பிக் கடை முடியவே மணி எட்டாகிவிடுகிறது’

கடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கடை1கடை2கடை3

கடை3

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (காலத்தில், இடத்தில்) முடிவு; இறுதி.

  ‘முதல், இடை, கடை என மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன’
  ‘எங்கள் வயல் கடைமடைக்கு அருகில் இருப்பதால், அணை நீர் கடைசியாகத்தான் வந்துசேரும்’