தமிழ் கடைக்கண் யின் அர்த்தம்

கடைக்கண்

பெயர்ச்சொல்

 • 1

  கண்ணின் ஓரத்திற்குக் கொண்டுவரும் கருவிழி.

  ‘வீட்டுக்குள் நுழையும்போதே யாரெல்லாம் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று கடைக்கண்ணால் பார்த்தான்’
  ‘‘சீக்கிரம் கிளம்புங்கள்’ என்று என் மனைவி கடைக்கண்ணால் ஜாடை காட்டினாள்’
  ‘முதல்வரின் கடைக்கண் பார்வை தங்கள்மேல் விழாதா என்று காத்திருக்கும் கட்சித் தலைவர்கள்’

 • 2

  (தெய்வத்தின்) அருள் பார்வை.

  ‘அம்பாள் நம்மீது கடைக்கண் வைக்க வேண்டும்’