தமிழ் கடைப்பிடி யின் அர்த்தம்

கடைப்பிடி

வினைச்சொல்கடைப்பிடிக்க, கடைப்பிடித்து

 • 1

  (கொள்கை, வழிமுறை, மரபு முதலியவற்றை) பின்பற்றுதல்.

  ‘இவை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்’
  ‘சாலை விதிகளை வாகன ஓட்டிகள் அனைவரும் கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்’
  ‘பிரதமர் குடியரசுத் தலைவருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற மரபு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது’

 • 2

  (துக்கம், நினைவு நாள் முதலியவற்றை) மேற்கொள்ளுதல்; அனுஷ்டித்தல்.

  ‘இறந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று துக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது’