தமிழ் கடையைக் கட்டு யின் அர்த்தம்

கடையைக் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

 • 1

  (அன்றைய வேலை முடிந்ததும்) கடையை மூடுதல்.

  ‘மணி பத்தாகிவிட்டது. இன்னுமா கடையைக் கட்டவில்லை?’

 • 2

  (நிரந்தரமாக) தொழிலை நிறுத்துதல்.

  ‘இந்த நிறுவனம் நஷ்டக் கணக்குக் காட்டி கடையைக் கட்டப்பார்க்கிறது என்று தொழிற்சங்கம் குற்றம்சாட்டியது’

 • 3

  பேச்சு வழக்கு (ஓர் இடத்தில் மேலும் இருக்கத் தேவை இல்லாததால்) புறப்படுதல்.

  ‘உன் வேலை முடிந்துவிட்டதல்லவா, கடையைக் கட்டு’
  ‘நீ கடையைக் கட்டு. எனக்குச் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது’