தமிழ் கடைவிரி யின் அர்த்தம்

கடைவிரி

வினைச்சொல்-விரிக்க, -விரித்து

 • 1

  (சாலை ஓரத்தில் அல்லது சந்தையில்) பொருள்களை விற்பனைக்குத் தயாராகப் பரப்பி வைத்தல்.

  ‘ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபாதை முழுவதும் சிறிய பொருள்களை விற்பவர்கள் கடைவிரித்துவிடுகிறார்கள்’

 • 2

  (ஒரு இடத்தில் பொருள்களை) பரப்பி வைத்தல்.

  ‘கடைவிரிக்காமல் புடவையை மடித்து வை’

 • 3

  (தேவையில்லை என்றபோதும் ஒரு கருத்து, விஷயம் போன்றவற்றைப் பற்றி) விரிவாகக் கூறுதல்.

  ‘நம் வீட்டு விஷயங்களையெல்லாம் பக்கத்து வீட்டுக்காரரிடம் கடைவிரிக்க வேண்டியதில்லை’
  ‘மேடை கிடைத்தால் போதும், தன் கருத்துகளைக் கடைவிரிக்க ஆரம்பித்துவிடுவார்’