தமிழ் கட்டிதட்டு யின் அர்த்தம்

கட்டிதட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

  • 1

    (மாவு அல்லது சிமெண்டு போன்றவை ஈரத்தினால் சிறுசிறு உருண்டைகளாக) பயன்படுத்த முடியாதவாறு கெட்டிப்படுதல்.

    ‘தண்ணீர் கொதித்ததும் ரவையைக் கொஞ்சம்கொஞ்சமாகப் போட்டுக் கட்டிதட்டாமல் கிளற வேண்டும்’
    ‘மழைக் காலத்தில் கேழ்வரகு மாவு கட்டிதட்டிவிடும்’
    ‘ஈரம் பட்டால் சிமிண்டு கட்டிதட்டிப் போய்விடும்’