தமிழ் கண் யின் அர்த்தம்

கண்

பெயர்ச்சொல்

 • 1

  (பார்ப்பதற்கான பொறி)

  1. 1.1 பார்ப்பதற்குப் பயன்படும் உறுப்பு; விழி

   ‘ஆந்தை போன்று அவனுக்குப் பெரிய வட்டமான கண்கள்’
   ‘கிழவருக்கு இன்னும் கண் தெரிகிறது, காது கேட்கிறது’

 • 2

  (பொருள்களில் கண் போன்று இருக்கும் பகுதி)

  1. 2.1 (தேங்காய், பனங்காய் முதலியவற்றில்) முளை வருவதற்கு வசதியாக உள்ள, குழிந்த, சிறு வட்ட வடிவத்தில் இருக்கும், கறுப்பு நிறப் பகுதி

   ‘பொதுவாகத் தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும்’

  2. 2.2 (மயிலின் தோகையில் உள்ள) கரு நிறப் புள்ளி

   ‘மயில் தோகையின் கண்’

  3. 2.3 (புண், கட்டி முதலியவற்றில் சீழ் வெளிவரும்) பழுத்த முனை

   ‘கட்டி பழுத்துக் கண் வைக்கவில்லை’

  4. 2.4 (சல்லடை, சில வகைப் பலகணி போன்றவற்றில் உள்ள) சிறு ஓட்டை

   ‘சல்லடைக் கண்களை மாவு அடைத்துக்கொண்டுவிட்டது’

 • 3

  (நோக்கம் குறித்தது)

  1. 3.1 கண்ணோட்டம்; பார்வை; நோக்கு

   ‘சட்டத்தின் கண்ணில் அனைவரும் சமம்’
   ‘இந்தப் பிரச்சினையை வரலாற்றுக் கண் கொண்டு பார்க்க வேண்டும்’

 • 4

  (மரபு வழக்கு)

  1. 4.1 (பெரும்பாலும் ‘ஒரு’ என்ற சொல்லுடன் சேர்ந்து வரும்போது) (ஏதேனும் ஒன்றின் மேல் வைக்கும்) விருப்பம்

   ‘எதிர் வீட்டுச் சிறுவனுக்கு நம் குழந்தை வைத்திருக்கும் பொம்மையின் மீது ஒரு கண்’

  2. 4.2 (பெரும்பாலும் ‘ஒரு’ என்ற சொல்லுடன் சேர்ந்து வரும்போது) கண்காணிப்பு

   ‘அவன்மேல் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்!’