தமிழ் கணக்கீடு யின் அர்த்தம்

கணக்கீடு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒத்த) மதிப்பு.

  ‘ஒரு டாலருக்கு நாற்பத்தைந்து ரூபாய் என்ற கணக்கீட்டில் பணம் வழங்கப்பட்டது’

 • 2

  கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை அடங்கிய செயல்பாடு.

  ‘இந்தக் கணிப்பொறி சிக்கலான கணக்கீடுகளையும் மிக எளிதாகச் செய்து முடிக்கிறது’
  ‘தமிழரின் காலக் கணக்கீட்டு முறை மறைந்துவிட்டது’
  ‘துல்லியமான கணக்கீடுகள்மூலம் மனிதன் விண்வெளியை வெற்றிகொள்ள முடியும்’