தமிழ் கணக்காக யின் அர்த்தம்

கணக்காக

வினையடை

 • 1

  (மணி, நாள், மாதம், ஆண்டு ஆகியவற்றை அடுத்து வரும்போது) (முதலில் குறிப்பிடப்பட்டதன் பன்மடங்கு என்ற) அளவில்.

  ‘மருத்துவரைப் பார்க்க மணிக் கணக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது’
  ‘மாதக் கணக்காக மழை பெய்யவில்லை’

 • 2

  (நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப்பெயர்களை அடுத்து வரும்போது முதலில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையின்) பல மடங்குகளாக.

  ‘திட்டங்களுக்கு லட்சக் கணக்காகச் செலவுசெய்து என்ன பயன்?’

 • 3

  (மிகவும்) சரியாக.

  ‘கணக்காக ஆறு மணிக்குப் பால்காரன் வந்துவிடுவான்’
  ‘செலவுசெய்வதில் அவர் மிகவும் கணக்காக இருப்பார்’
  ‘காப்பியில் சர்க்கரை கணக்காக இருக்கிறது’

தமிழ் கணக்காக யின் அர்த்தம்

கணக்காக

இடைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ‘(சொல்லப்பட்ட ஒன்றை) போல’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘சாமியார் கணக்காக அவன் முடியை வளர்த்திருந்தான்’