தமிழ் கணக்கிடு யின் அர்த்தம்

கணக்கிடு

வினைச்சொல்கணக்கிட, கணக்கிட்டு

 • 1

  கணக்குப் பார்த்தல்; கணக்குப் போடுதல்.

  ‘கணக்கிட்ட பிறகுதான் கட்ட வேண்டிய பாக்கி எவ்வளவு என்று தெரியும்’
  ‘தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குக் கிடைக்கும் லாபத்தைக் கணக்கிட்டுக் கூடுதல் சம்பளம் கேட்கிறார்கள்’

 • 2

  எண்ணுதல்.

  ‘கடலில் கணக்கிட முடியாத உயிரினங்கள் வாழ்கின்றன’