தமிழ் கணக்குப் போடு யின் அர்த்தம்

கணக்குப் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (ஒரு செயலின் போக்கை அல்லது முடிவை) கவனமாகக் கணித்தல்.

    ‘நீ எனக்குப் பணம் கடன் கொடுத்திருக்கிறாய் என்பதற்காக நீ சொன்னதையெல்லாம் செய்துவிடுவேன் என்று கணக்குப் போட்டுவிட்டாயா?’
    ‘அவரிடம் நல்லவன்போல் நடித்தால் சொத்தைத் தன் பெயரில் எழுதிவிடுவார் என்று கணக்குப் போட்டான். ஆனால் அது நடக்கவில்லை’