தமிழ் கண்கட்டு வித்தை யின் அர்த்தம்

கண்கட்டு வித்தை

பெயர்ச்சொல்

  • 1

    கண் எதிரிலேயே சில பொருள்களைத் திடீரென்று தோன்ற அல்லது மறையச் செய்யும் (கண்களால் பார்த்தும் நம்ப முடியாத) ஜால வித்தை.

    ‘பெண் அந்தரத்தில் நிற்பதுபோல் காட்டும் ஒரு கண்கட்டு வித்தை’
    ‘அவரைக் காணோமா? நம்ப முடியவில்லையே; இது என்ன கண்கட்டு வித்தையா!’