கண்காணி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கண்காணி1கண்காணி2

கண்காணி1

வினைச்சொல்

 • 1

  (பிரச்சினை, தவறு போன்றவற்றைத் தடுக்கும் வகையில்) நடவடிக்கை மேற்கொள்ளுதல்; ஜாக்கிரதையாகக் கவனித்தல்.

  ‘கலவரம் நடந்த இடத்தில் நிலைமையைக் காவல்துறையினர் கண்காணித்துவருகிறார்கள்’
  ‘தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன’

 • 2

  மேற்பார்வையிடுதல்.

  ‘ஊழியர்களின் பணிகளை உயர் அதிகாரிகள் சரியாகக் கண்காணிப்பதில்லை என்று புகார் வந்துள்ளது’
  ‘இயந்திரங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு இவருடையது’

கண்காணி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கண்காணி1கண்காணி2

கண்காணி2

பெயர்ச்சொல்