தமிழ் கண்காணிப்பு யின் அர்த்தம்

கண்காணிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஓர் அமைப்பின் மீது அல்லது ஒருவருடைய செயல்களின் மீது அல்லது ஓர் இடத்தைச் சுற்றி) கூர்ந்த, தொடர்ந்த கவனிப்பு.

  ‘தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டதன் மூலம் காடுகளில் மரம் வெட்டப்படுவது கணிசமாகக் குறைந்துள்ளது’
  ‘அந்தப் போராட்டத் தலைவர் விடுதலை செய்யப்பட்ட பின் அவர் நடவடிக்கைகள் பலத்த கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன’

 • 2

  மேற்பார்வை.

  ‘தூரத்து உறவினர் ஒருவரின் கண்காணிப்பில் என் தம்பி வளர்ந்தான்’
  ‘என் நிலம் இன்னும் அவருடைய நேரடிக் கண்காணிப்பில்தான் இருந்துவருகிறது’