தமிழ் கண்ட யின் அர்த்தம்

கண்ட

பெயரடை

 • 1

  (பெரும்பாலும் எரிச்சலுடன் கூறும்போது) இன்னது, இன்னார் என்று குறிப்பிடப்படாத அல்லது தீர்மானிக்கப்படாத.

  ‘வேலை தேடிக் கண்ட இடங்களுக்குச் சென்றுவந்ததுதான் மிச்சம்’
  ‘கண்ட நேரங்களில் வந்து அவன் என்னைத் தொந்தரவுசெய்வான்’
  ‘கண்ட தண்ணீரைக் குடித்தால் வயிற்றுப்போக்குதான் வரும்’
  ‘தெருவில் சண்டைபோட்டால் இப்படித்தான் கண்டவனெல்லாம் வந்து புத்திமதி சொல்வான்’
  ‘காசு இருக்கிறது என்பதற்காகக் கண்டதை வாங்கிப்போட முடியுமா?’