தமிழ் கண்டம் யின் அர்த்தம்

கண்டம்

பெயர்ச்சொல்

 • 1

  கழுத்தின் முன்பகுதி; தொண்டை.

  ‘சிவன் கண்டம் கறுத்தவனாகவே கூறப்படுகிறான்’
  ‘கண்டம் கீறப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருந்தார்’

 • 2

  (ஒலி பிறக்கும்) தொண்டை.

  ‘கண்டம் உடைந்துவிட்டதால் குரல் மாறிவிட்டது’

தமிழ் கண்டம் யின் அர்த்தம்

கண்டம்

பெயர்ச்சொல்

 • 1

  பூமியில் உள்ள நிலப்பரப்பின் பெரும் பிரிவுகளுள் ஒன்று.

  ‘அண்டார்டிகா ஒரு கண்டம் என்பது உனக்குத் தெரியுமா?’

தமிழ் கண்டம் யின் அர்த்தம்

கண்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (மீன் அல்லது இறைச்சி) துண்டு.

  ‘மீன் குழம்பிலிருந்து ஒரு கண்டம் எடுத்துப் போடு’

தமிழ் கண்டம் யின் அர்த்தம்

கண்டம்

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  (கிரகத்தின் தீய விளைவுகளால்) உயிருக்கு நேரக்கூடிய ஆபத்து.

  ‘இந்த ஜாதகக்காரருக்கு ஏழாம் வயதில் தண்ணீரில் கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு’

உச்சரிப்பு

கண்டம்

/(g-)/

தமிழ் கண்டம் யின் அர்த்தம்

கண்டம்

பெயர்ச்சொல்

உயிரியல்
 • 1

  உயிரியல்
  (சில உயிரினங்களின் உடல்) தனித்த உள், வெளி உறுப்புகளைக் கொண்டு பகுதிபகுதியாகப் பிரிந்திருப்பது.

  ‘மண்புழுவின் உடல் உருண்டை வடிவமாகவும் பல கண்டங்களை உடையதாகவும் காணப்படுகிறது’
  ‘கரப்பான் பூச்சியின் மார்புப் பகுதி மூன்று கண்டங்களால் ஆனது’