தமிழ் கண்டி யின் அர்த்தம்

கண்டி

வினைச்சொல்கண்டிக்க, கண்டித்து

 • 1

  (தவறைச் சுட்டிக்காட்டி இவ்வாறு செய்யக் கூடாது என்று) திருந்தும்படி கடுமையாகக் கூறுதல்.

  ‘குழந்தையைக் கண்டித்து வளர்க்கலாம்; ஆனால் தண்டிக்கக் கூடாது’
  ‘‘நீ இவ்வாறு திட்டியிருக்கக் கூடாது’ என்று அவர் என்னைக் கண்டித்தார்’

 • 2

  கண்டனம் தெரிவித்தல்.

  ‘நேற்று நடந்த வன்முறைச் செயலைப் பலரும் கண்டித்திருக்கிறார்கள்’
  ‘அந்த வங்கியில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள் கண்டிக்கத் தக்கவை’