தமிழ் கண்டிப்பாக யின் அர்த்தம்

கண்டிப்பாக

வினையடை

 • 1

  நிச்சயமாக.

  ‘கண்டிப்பாக ஏதோ தவறு நடந்திருக்கிறது’
  ‘கண்டிப்பாக இது என் அப்பாவின் கையெழுத்துதான்’
  ‘நாளைக்குக் கண்டிப்பாக உங்கள் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன்’

 • 2

  அவசியம்.

  ‘தாங்கள் கண்டிப்பாக எங்கள் வீட்டுத் திருமணத்துக்கு வர வேண்டும்’
  ‘நல்ல நீரும் காற்றும் அனைவருக்கும் கண்டிப்பாகத் தேவை’