தமிழ் கண்டிப்பு யின் அர்த்தம்

கண்டிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இதைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்பதில் ஒருவர் காட்டும்) உறுதி.

  ‘குழந்தைக்குத் தெருவில் விற்பதை வாங்கிக் கொடுக்கக் கூடாது என்பதில் அப்பா மிகவும் கண்டிப்பு’
  ‘விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்’
  ‘அவர் மிகவும் கண்டிப்பான அதிகாரி’

 • 2

  கடுமையான கட்டுப்பாடு.

  ‘தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்தவன் நான்’
  ‘அவருடைய கண்டிப்பு என்னைத் தவறு செய்யவிடாமல் தடுத்தது’