தமிழ் கண்டுபிடி யின் அர்த்தம்
கண்டுபிடி
வினைச்சொல்
- 1
(புதிய பொருள், கொள்கை முதலியவற்றை) உருவாக்குதல்; (இதுவரை அறியப்படாமல் இருந்த ஒன்றை) அறியச் செய்தல்.
‘புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பெருமுயற்சி செய்துவருகிறார்கள்’‘இவ்வளவு அழகான குகைக் கோயிலை இவ்வளவு நாள் யாரும் கண்டுபிடிக்காமல் இருந்தது எப்படி?’ - 2
(ஒன்றை) தேடி அறிதல்.
‘இந்தப் புகைப்படத்தில் நான் எங்கிருக்கிறேன் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்’‘இவ்வளவு சொல்லியும் இந்த விடுகதைக்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?’