தமிழ் கண்டுபிடிப்பு யின் அர்த்தம்

கண்டுபிடிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  புதிதாக உருவாக்கப்பட்டது; முதல்முதலாக வெளிப்படுத்தப்பட்டது.

  ‘இந்த மருந்து வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் கண்டுபிடிப்பு ஆகும்’
  ‘தொல்பொருள் ஆய்வாளர்களின் இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றுக்கு உதவும்’

 • 2

  (ஆராய்ச்சி, வழிமுறை போன்றவற்றால்) கண்டறியப்பட்டது.

  ‘இத்தனை ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தீர்களே, உங்களுடைய புதிய கண்டுபிடிப்புகள் என்ன?’
  உரு வழக்கு ‘முதன்முதலாகத் திரைக்கு அறிமுகமாகியிருக்கும் இந்த நடிகரை இயக்குநரின் கண்டுபிடிப்பு என்று சொல்லலாம்’