தமிழ் கண்ணடி யின் அர்த்தம்

கண்ணடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (ஒருவருக்கு ஒன்றை உணர்த்தக் கண்ணைச் சிமிட்டி) ஜாடை காட்டுதல்.

    ‘‘நான் சொன்ன பெண் அவள்தான்’ என்று நண்பனைப் பார்த்துக் கண்ணடித்தான்’

  • 2

    (பெண்ணைப் பார்த்துக் கண்ணால்) குறிப்புக் காட்டுதல்.

    ‘‘அவன் என்னைப் பார்த்துக் கண்ணடித்தான்’ என்று அவள் தன் அண்ணனிடம் புகார் கூறினாள்’