தமிழ் கண்ணாக இரு யின் அர்த்தம்

கண்ணாக இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

  • 1

    (நினைத்தது நிறைவேறும்வரையில், ஒன்றை அடைய வேண்டும் என்பதில்) குறியாக இருத்தல்.

    ‘எது எப்படி நடந்தாலும் அவன் தன் காரியத்தில் மட்டும் கண்ணாக இருப்பான்’
    ‘புகழை லட்சியம் பண்ணாமல் கருமமே கண்ணாக இருப்பவர்களும் உண்டு’