தமிழ் கண்ணாடி யின் அர்த்தம்

கண்ணாடி

பெயர்ச்சொல்

 • 1

  ஒளி ஊடுருவக்கூடியதும் எளிதில் உடையக்கூடியதுமான ஒரு பொருள்.

  ‘கண்ணாடித் தொட்டி’
  ‘கண்ணாடிக் கதவு’
  ‘கண்ணாடி வளையல்’

 • 2

  உருவத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் பாதரசம் பூசப்பட்ட பின் பகுதியையும் வழுவழுப்பான முன் பகுதியையும் கொண்ட, தட்டையான பொருள்.

  ‘கண்ணாடியின் முன் நின்று தலைவாரிக்கொண்டாள்’

 • 3

  (பார்வைக் குறையைச் சரிசெய்ய) கண்ணில் அணிந்துகொள்ளும் சாதனம்.