தமிழ் கண்ணாமூச்சி காட்டு யின் அர்த்தம்

கண்ணாமூச்சி காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    (கிடைத்துவிடுவதுபோல் இருந்த ஒன்று) கிடைக்காமல் நழுவிப்போதல்.

    ‘இத்தனை ஆண்டுகள் ஆகியும் பதவி உயர்வு அவருக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கிறது’
    ‘திரையுலக வாய்ப்பு அவனுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கிறது’
    உரு வழக்கு ‘என்ன, இன்று வெயில் வருவதும் போவதுமாகக் கண்ணாமூச்சி காட்டுகிறது!’