தமிழ் கண்ணில் ஒற்றிக்கொள் யின் அர்த்தம்

கண்ணில் ஒற்றிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (மேன்மையான தன்மையைப் பெற்றிருப்பதால்) பாராட்டிப் போற்றுதல்.

    ‘அந்தச் சிறுவனின் கையெழுத்தைப் பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்’
    ‘அவர்கள் வீட்டில் பொருள்களை அடுக்கிவைத்திருக்கும் அழகைப் பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்’