தமிழ் கண்ணில் படு யின் அர்த்தம்

கண்ணில் படு

வினைச்சொல்பட, பட்டு

  • 1

    (தற்செயலாக) தென்படுதல்; (படிக்கும்போது) பார்வைக்கு வருதல்.

    ‘எத்தனையோ முறை இந்த வழியாகச் சென்றிருக்கிறேன். இன்றுதான் அந்த விளம்பரம் என் கண்ணில் பட்டது’
    ‘எவ்வளவோ கவனமாகத்தான் அச்சுப் படிவங்களைப் பார்த்தேன். இருந்தாலும் இந்த அச்சுப் பிழை என் கண்ணில் படவில்லை’