தமிழ் கண்ணெடுத்து யின் அர்த்தம்

கண்ணெடுத்து

வினையடை

 • 1

  (‘பார்’ என்ற வினையுடன்) (தலையை) உயர்த்தி; நிமிர்ந்து.

  ‘அவன் பழக்கமில்லாத பெண்களைக் கண்ணெடுத்துப் பார்க்கத் தயங்குவான்’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறை வடிவத்தில் மட்டும்) (ஒருவர் மீதுள்ள அன்பின் காரணமாக) பார்வைபடும்படி.

  ‘என்றோ நடந்த சின்னப் பிரச்சினையை மனத்தில் வைத்துக்கொண்டு இப்போது அவன் என்னைக் கண்ணெடுத்துப் பார்ப்பதுகூட இல்லை’
  ‘இறைவா! என்னைக் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாயா?’