தமிழ் கண்ணைக் கசக்கு யின் அர்த்தம்

கண்ணைக் கசக்கு

வினைச்சொல்கசக்க, கசக்கி

  • 1

    (பெரும்பாலும் பெண்களைக் குறிக்கும்போது) அழப்போவதன் அறிகுறியாகத் தோன்றும் கண்ணீரைத் துடைப்பதற்காகக் கண்களைத் தேய்த்தல்.

    ‘இந்த வருஷம் கொடைக்கானலுக்குப் போக முடியாது என்று சொன்னதும் மூத்த மகள் கண்ணைக் கசக்க ஆரம்பித்துவிட்டாள்’