தமிழ் கண்ணை உறுத்து யின் அர்த்தம்

கண்ணை உறுத்து

வினைச்சொல்உறுத்த, உறுத்தி

 • 1

  (ஒருவரின் உடமைகள் மற்றவரை) எரிச்சலடையச் செய்தல்.

  ‘நாம் வீடு கட்டியது எல்லோருக்கும் கண்ணை உறுத்துகிறது’
  ‘அவள் புதுச் சங்கிலி போட்டுக்கொண்டது மற்றவர்களுக்குக் கண்ணை உறுத்துகிறது’

 • 2

  (கண்ணில் படுவது) ஆசையைத் தூண்டுவதாக அமைதல்; சபலத்தை ஏற்படுத்துதல்.

  ‘பீரோவில் கட்டுகட்டாக இருந்த பணம் அவன் கண்ணை உறுத்தியது’