தமிழ் கண்ணை மூடிக்கொண்டு யின் அர்த்தம்

கண்ணை மூடிக்கொண்டு

வினையடை

 • 1

  எந்த விதத் தயக்கமும் இல்லாமல்; யோசனை செய்யாமல்.

  ‘இந்தப் புடவைக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஐநூறு ரூபாய் கொடுக்கலாம்’
  ‘பல முறை இந்தப் பாதையில் பயணம் செய்திருக்கிறேன். அதனால் கண்ணை மூடிக்கொண்டு கார் விடுவேன்’

 • 2

  (தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை) கவனிக்காமல்; பொருட்படுத்தாமல்.

  ‘என் கண்ணுக்கு எதிரே நடக்கும் அக்கிரமத்தைப் பார்த்துவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு போகச் சொல்கிறாயா?’
  ‘பக்கத்து வீட்டுப் பெண் கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு போக முடியவில்லை’

 • 3

  சுயமாகச் சிந்திக்காமல்; யோசித்துப் பார்க்காமல்.

  ‘அவன் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடுவதா?’
  ‘கண்ணை மூடிக்கொண்டு அவனுக்குப் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டாயே!’