கணம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கணம்1கணம்2கணம்3

கணம்1

பெயர்ச்சொல்

 • 1

  (கண் இமைப்பதற்குள் கடந்துவிடும்) மிகக் குறைந்த காலம்.

  ‘சில கணங்கள் உணர்வு இழந்து கிடந்தார்’
  ‘அவள் முகத்தில் புன்னகை ஒரு கணத்தில் தோன்றி மறைந்தது’
  ‘பீதியும் குழப்பமும் கணத்துக்குக் கணம் அதிகரிக்கின்றன’

 • 2

  ஒன்றைச் செய்வதற்கு உரிய தருணம்.

  ‘உண்மையைச் சந்திக்க வேண்டிய கணத்தில் கோழையாகிவிடாதே!’

கணம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கணம்1கணம்2கணம்3

கணம்2

பெயர்ச்சொல்

 • 1

  (தேவர், அசுரர் போன்றவர்களைக் குறித்து வரும்போது) பிரிவு; வகை.

  ‘அசுர கணம்’
  ‘தேவ கணம்’
  ‘பூத கணம்’

உச்சரிப்பு

கணம்

/(g-)/

கணம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கணம்1கணம்2கணம்3

கணம்3

பெயர்ச்சொல்

கணிதம்
 • 1

  கணிதம்
  பொதுவான அம்சங்கள் கொண்ட பொருள்களின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு.

உச்சரிப்பு

கணம்

/(g-)/