தமிழ் கண்விழி யின் அர்த்தம்

கண்விழி

வினைச்சொல்-விழிக்க, -விழித்து

 • 1

  தூக்கத்திலிருந்து எழுதல்.

  ‘காலையில் கண்விழித்தபோது வீட்டில் யாரும் இல்லை’

 • 2

  (இரவில்) தூங்காமல் விழித்துக்கொண்டிருத்தல்.

  ‘குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் இரவு முழுதும் கண்விழித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது’
  ‘சிவராத்திரி அன்று கண்விழிக்கப்போவதாக அம்மா சொன்னாள்’