தமிழ் கண்வை யின் அர்த்தம்

கண்வை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு) தீங்கு அல்லது கேடு வரும் வகையில் பார்த்தல்; பொறாமைகொள்ளுதல்.

    ‘என் புதுப் புடவையின் மீது யாரோ கண்வைத்துவிட்டார்கள். அதனால்தான் ஆணி குத்தி இப்படிக் கிழிந்துவிட்டது’
    ‘வியாபாரம் நன்றாக நடக்கிறது. யாரும் கண்வைக்காமல் இருக்க வேண்டும்’