தமிழ் கணி யின் அர்த்தம்

கணி

வினைச்சொல்கணிக்க, கணித்து

 • 1

  (இன்னது என்று அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்று) மதிப்பிடுதல்; நிர்ணயித்தல்; நிகழப்போவதை முன்கூட்டியே சொல்லுதல்.

  ‘இந்த அறிகுறிகளை வைத்து இது காசநோய்தான் என்று கணித்துவிட முடியும்’
  ‘சோதிடர் எதிர்காலத்தைக் கணிக்கிறார்’

 • 2

  (குறிப்பிட்ட முறையில்) கணக்கிடுதல்.

  ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குகளின் மதிப்பு கணிக்கப்படும் விதம் வேறு’

 • 3

  ஜாதகம் எழுதுதல்.

  ‘உன் ஜாதகத்தைக் கணித்த முறை சரியில்லை’