தமிழ் கணிப்பு யின் அர்த்தம்

கணிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (இன்னது என்று அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்று செய்யப்படும்) நிர்ணயம்; நிகழப்போவதை குறிப்பிட்ட அடிப்படைகளைக் கொண்டு முன்கூட்டியே சொல்லுவது.

  ‘வானிலை ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும்’

 • 2

  (ஒன்றின் தன்மையைப் பற்றிய அல்லது அளவைப் பற்றிய) மதிப்பீடு.

  ‘அவரைப் பற்றி என்னுடைய கணிப்பைவிட உன்னுடைய கணிப்பு சரியாகவே இருக்கிறது’
  ‘அரசியல்வாதிகள் பற்றி மக்களின் கணிப்பு என்ன?’
  ‘ஒரு நாளில் துரித ரயில் சேவையை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் என்ற கணிப்பு மேற்கொள்ளப்படும்’

 • 3

  (ஜாதகம்) குறித்தல்.

  ‘ஜாதகக் கணிப்பிற்குக் கூடக் கணிப்பொறி பயன்படுத்தப்படுகிறது’