தமிழ் கணு யின் அர்த்தம்

கணு

பெயர்ச்சொல்

  • 1

    (கரும்பு, மூங்கில் முதலியவற்றில்) இரண்டு துண்டுகளை இணைப்பதுபோல் இடையில் இருக்கும் சற்றுக் கடினமான பகுதி.

  • 2

    (கைவிரல், முதுகுத்தண்டு முதலியவற்றில் காணப்படும்) இணைப்பு.

    ‘கால் மடங்கிக் கணுவைச் சுற்றி வீங்கிவிட்டது’
    ‘கணுவுக்குக் கணு வலிக்கிறது’