தமிழ் கண்டத்தட்டு யின் அர்த்தம்

கண்டத்தட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (புவியியலில்) பூமியின் மேற்பரப்பைத் தகடுபோல் மூடியிருக்கும், தட்டு போன்ற பெரும் பாறைகளில் ஒன்று.

    ‘மிகச் சிறிய கண்டத்தட்டின் கனம் 50 கிலோமீட்டர் ஆகும்’
    ‘பல கண்டத்தட்டுகள் இணைந்துதான் பூமியின் மேற்பரப்பு உண்டாகியிருக்கிறது’