தமிழ் கண்டெடு யின் அர்த்தம்

கண்டெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

 • 1

  (ஒரு பொருளை) தற்செயலாகப் பார்த்து எடுத்தல்.

  ‘இந்தப் பேனாவை வழியில் கண்டெடுத்தேன்’
  ‘இரண்டு மாதமாகத் தேடிக்கொண்டிருக்கும் புத்தகத்தைக் கடைசியில் உன் பெட்டியிலிருந்து கண்டெடுத்தேன்’

 • 2

  (நாணயம், மட்பாண்டம் முதலிய பொருள்களை அகழாய்வின்போது) கண்டுபிடித்தல்.

  ‘உறையூரில் சோழர் காலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன’