தமிழ் கத்து யின் அர்த்தம்

கத்து

வினைச்சொல்கத்த, கத்தி

 • 1

  (வலி, பயம், கோபம் போன்றவற்றால்) அலறுதல்; பெரும் குரல் எழுப்புதல்.

  ‘கத்தக்கூட முடியாதபடி அவனுடைய வாயைக் கட்டியிருந்தார்கள்’
  ‘பக்கத்து வீட்டில் யாரோ கத்துவதைக் கேட்டு அவள் வெளியே வந்தாள்’
  ‘அவன் வலியால் கத்தினான்’

 • 2

  (விலங்குகள், பறவைகள்) உரக்க ஒலி எழுப்புதல்.

  ‘கன்றைக் காணாத பசு ‘ம்மா’ என்று கத்தியது’
  ‘எல்லாத் தவளைகளும் கத்தத் தொடங்கின’

 • 3

  உரத்த குரலில் பேசுதல் அல்லது திட்டுதல்.

  ‘‘அவனை விடப்போவதில்லை’ என்று ஆவேசத்துடன் கத்தினார்’
  ‘ஏன் இப்படிக் கத்துகிறாய்? மெதுவாகப் பேசு’
  ‘‘நேரத்திற்கு வீடு திரும்பாவிட்டால் மனைவி கத்துவாள்’ என்றான் நண்பன்’