தமிழ் கீதம் யின் அர்த்தம்

கீதம்

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) இசை; பாட்டு.

  ‘எங்கிருந்தோ ஓர் இனிய கீதம் கேட்டது’
  ‘பாரதியாரின் தேசிய கீதங்கள் மக்கள் மனத்தில் எழுச்சியூட்டின’

 • 2

  இசைத்துறை
  (குறிப்பாக ஒரு ராகத்தில்) பாடலையும் ஸ்வரங்களையும் கொண்ட, இசையின் ஆரம்பப் பாடங்களின் ஒரு பகுதி.