தமிழ் கதவு யின் அர்த்தம்

கதவு

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடம், அறை முதலியவற்றின் வாயிலில் அல்லது அலமாரி, ஜன்னல், வாகனம் முதலியவற்றின் வெளிப்பக்கத்தில் திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில்) மரத்தால் அல்லது பிற பொருளால் ஒற்றையாக அல்லது பிரிவுகளாகச் செய்யப்படும் அமைப்பு.

    ‘கதவைச் சாத்திவிட்டு உள்ளே வா’
    ‘ஜன்னல் கதவு திறந்துகிடந்தது’
    உரு வழக்கு ‘உனக்காக என் மனக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’